×

வத்தலக்குண்டுவில் விபத்திற்கு காத்திருந்த சிக்னலின் அடிப்பகுதி சிமெண்ட் கலவையால் மூடல்: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

வத்தலக்குண்டு, ஏப். 2: வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த சிக்னல் அகற்றப்பட்டு அதன் கீழ் பகுதி அகற்றப்படாமல் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனை அகற்ற கோரி வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா நற்பணி நல சங்கத்தினர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரை மாறன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். மேலும் இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை ஏற்ற நெடுஞ்சாலை துறையினர் சில நாட்களில் சிக்னலின் அடிப்பகுதியை சிமெண்ட் கலவையால் மூடினர். தொடர்ந்து அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் நீங்கியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறையினருக்கும் சுப்பிரமணிய சிவா சங்கத்தினர், அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post வத்தலக்குண்டுவில் விபத்திற்கு காத்திருந்த சிக்னலின் அடிப்பகுதி சிமெண்ட் கலவையால் மூடல்: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Watalakundu ,Vathalakundu ,Ap ,Watalakundu Kalimman Temple ,Subramaniya Shiva Vapani ,
× RELATED வத்தலக்குண்டு விருவீடுவில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு