×

மயாமி ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்

புளோரிடா: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவுடன் (32 வயது, 12வது ரேங்க்) மோதிய சின்னர் (22 வயது, 3வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இது சின்னர் வென்ற 2வது மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடராகும். முன்னதாக, 2021 மற்றும் 2021 மயாமி ஓபனில் பைனல் வரை முன்னேறியிருந்த சின்னர் அந்த 2 முறையும் 2வது இடமே பிடிக்க முடிந்தது. தற்போது 3வது முயற்சியில் சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார்.

The post மயாமி ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Yannick Sinner ,Miami Open ,Florida ,USA ,Sinner ,Dinakaran ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் சின்னர்