×

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் பூஸ்டர் தடுப்பூசி போடுதல் குறித்து ஆலோசனை: விரைவில் ஒன்றிய அரசு முடிவு அறிவிப்பு

டெல்லி: ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் பூஸ்டர் தடுப்பூசி போடுதல் குறித்து இன்று ஒன்றிய அரசு முக்கிய ஆலோசனை நடத்துகிறது. விரைவில் முக்கிய முடிவு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் பைசர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவேக்சின் உள்ளிட்ட 2 டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் சிறுவர்களுக்கு தனியாக தடுப்பூசியும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே ஒமிக்ரான் பரவல் பல நாடுகளிலும் இருந்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்ைகயில் பல நாடுகள் இறங்கியுள்ளன. சமீபத்தில் சீரம் நிறுவனம் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரியிருந்தது. அதேநேரம் தொழில்நுட்பக் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியதால், பூஸ்டர் தடுப்பூசி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் பூஸ்டர் தடுப்பூசி போடுதல் குறித்து ஆலோசனை: விரைவில் ஒன்றிய அரசு முடிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...