×

புறப்படுவதில் நீண்ட தாமதம் விமானத்திலேயே பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க வசதி: புதிய வழிகாட்டுதல் அமல்

புதுடெல்லி: விமானம் புறப்படுவதில் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டால், பயணிகள் விமானத்திலேயே காத்திருக்காமல், புறப்பாடு வாயில் வழியாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் தினசரி 3,500 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்வேறு காரணங்களால் சில சமயம் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 17ம் தேதி பனிமூட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் 12 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் விமான ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக விமான நிறுவனத்திற்கும், மும்பை விமான நிலைய பராமரிப்பு நிறுவனத்திற்கு ரூ.1.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, நீண்ட நேர தாமதம் ஏற்படும் போது விமானத்திலேயே பயணிகள் தங்கியிருக்காமல், புறப்பாடு வாயில் வழியாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் (பிசிஏஎஸ்) கடந்த 30ம் தேதி வெளியிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் டைரக்டர் ஜெனரல் சுல்பிகர் ஹசன் கூறி உள்ளார்.

The post புறப்படுவதில் நீண்ட தாமதம் விமானத்திலேயே பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க வசதி: புதிய வழிகாட்டுதல் அமல் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,India ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...