×

தர்மபுரி பொதுக்கூட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் டாக்டர். அசோகனை ஆதரித்து, அதிமுக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் வள்ளலார் திடலில் இன்று (2ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இப்பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரத்து பேசுகிறார். இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.

நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்கிறார். முன்னதாக தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் இந்த பொது பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எஸ்ஆர்.வெற்றிவேல், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத், டிஆர்.அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.

The post தர்மபுரி பொதுக்கூட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Dharmapuri ,AIADMK ,Dr. ,Ashoka ,Vallalar Thital ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...