×

ராஜாக்கமங்கலம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஈத்தாமொழி, ஏப்.2: ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணபதிபுரம் கல்லுக்கட்டி பகுதியில் டீக்கடை முன் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.

அவரை காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இதில் அவர் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்பது தெரிய வந்தது. மேலும் இந்த கஞ்சா விற்பனையில் தெக்குறிச்சி பகுதியை சேர்ந்த டெனி, ராஜாக்கமங்கலம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த அசோக் (22), காரவிளை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த நிஷாந்த் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்த போலீசார், வேறு கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

The post ராஜாக்கமங்கலம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Ethamozhi ,Inspector ,Rama ,Kallukkatti ,Ganapathipuram ,Rajakkamangalam ,
× RELATED ஈத்தாமொழி அருகே கோயில்...