×

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

ஈரோடு, ஏப்.2: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்டமாக கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2530 முதன்மை அலுவலர்களும், 7887 நான்கு நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 10,417 அலுவலர்களுக்கு கணினி மூலமாக முதற்கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மார்ச் 24ம் தேதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்த முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2ம் கட்ட பயிற்சிக்கு 2,530 முதன்மை அலுவலர்களும், 2,530 முதல்நிலை அலுவலர்களும், 2,530 2ம் நிலை அலுவலர்களும், 2,530 3ம் நிலை அலுவலர்களும், 297 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,417 அலுவலர்களுக்கு கணினி மூலமாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ்ரஞ்சன் மீனா முன்னிலையில் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் மற்றும் தேர்தல் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...