×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 11,408 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட கணினி குலுக்கல் பெண் அலுவலர்களுக்கு பணிபுரியும் தொகுதியில் ஒதுக்கீடு

திருவண்ணாமலை, ஏப்.2: திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும்11,408 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது அதை விட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் 11408 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே கணினி குழுக்கள் மூலம் பணி ஒதுக்கப்பட்டு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் நடந்தது. அதன் மூலம், வாக்குச்சாவடி தலைமை வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பெண் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகில், அதே சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலேயே பணி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா, ஆரணி தேர்தல் பொது மேற்பார்வையாளர் சுஷாந்த் கவுரவ், டிஆர்ஓ பிரியதர்ஷினி, செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 11,408 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட கணினி குலுக்கல் பெண் அலுவலர்களுக்கு பணிபுரியும் தொகுதியில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Tiruvannamalai ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...