- சத்தன்குளம்- பண்டாரபுரம் சாலை
- சதங்குளம்
- பண்டாரபுரம்
- சாதன்குளம் நகராட்சி பண்டாரபுரம்
- பிஎஸ்என்எல்
- தின மலர்
சாத்தான்குளம், ஏப். 2: சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில் பழுதான பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் பேரூராட்சி பண்டாரபுரம் ரஸ்தாவில் பண்டாரபுரம் செல்லும் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சாலை பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பகுதியான அதற்கடுத்துள்ள சுமார் 3 மீட்டர் தூரம் அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்காக சாலையை உடைத்து குழாய் பதிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி குண்டும், குழியுமாக காணப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சி சார்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த உடைக்கப்பட்ட பகுதிக்கு முன்பு வரை சாலை அமைத்து முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பண்டாரபுரம் சாலையில் 3 மீட்டர் பகுதி மட்டும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த வழியாக பண்டாரபுரம், விஜயனூர், விஜயராமபுரம், திசையன்விளை பகுதிக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி சார்பில் சாலை அமைக்கப்பட்ட போது இந்த பழுதான சாலை வரை அமைக்க வலியுறுத்தியும் அவர்கள் அமைக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி பண்டாரபுரம் சாலையில் பழுதானதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில் பழுதான பகுதியை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.