×

நாங்குநேரி சுற்றுவட்டார 44 குளங்களுக்கு பச்சையாற்று தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை

நெல்லை, ஏப்.2: நாங்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லவும், நாங்குநேரி சுற்று வட்டார 44 குளங்களுக்கு பச்சையாற்று தண்ணீர் கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன் என நாங்குநேரி தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி உறுதியளித்தார். நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி, தனது பிறந்த ஊரான நாங்குநேரி தளபதி சமுத்திரம் ஊராட்சி, நல்லான்குளம் ஊரில் வசிக்கும் அவரது தாயார் பூங்கொடி அம்மாளிடம் ஆசி பெற்றார். இதையடுத்து நாங்குநேரி மெயின்பஜார், மறுகால்குறிச்சி, கிருஷ்ணன்புதூர், பெரும்பத்து, மஞ்சன்குளம் மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக புதுக்குறிச்சியில் பிரசாரம் துவக்கிய அவர், பருத்திப்பாடு, பெருமாள்நகர், மூலைக்கரைப்பட்டி, தெய்வநாயகப்பேரி, மலையன்குளம், கருப்புக்கட்டி, மருதகுளம், மூன்றடைப்பு, பாணான்குளம், தாழைகுளம், மறுகால்குறிச்சி, நாங்குநேரி, பெரும்பத்து, அணைக்கரை, சிறுமளஞ்சி, தளபதி சமுத்திரம், நல்லான்குளம், வாகைகுளம், பட்டர்புரம், ஏமன்குளம், காரியாகுளம், பரப்பாடி, மன்னார்புரம், இட்டமொழி, பெரும்பனை, தினையூரணி, காரியாண்டி, வெங்கட்ராயபுரம், காடன்குளம், முனைஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.

பாளை அருகே புதுக்குறிச்சியில் நடந்த பிரசாரத்தில் வேட்பாளர் ஜான்சி ராணி பேசுகையில் ‘‘நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து நான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். நாங்குநேரி தொகுதியில் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படும். நாங்குநேரி பகுதிக்கு உட்பட்ட 44 குளங்களுக்கு பச்சையாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். நாங்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்போம். நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற இங்கு தேவையான அளவு இலவச போட்டி தேர்வு மையங்களை அமைத்து கொடுப்போம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு எத்தனையோ திட்டங்களை அள்ளி தந்தார். பெண்கள் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்’’ என்றார். முன்னதாக ஜான்சிராணி, தனது பிறந்த ஊரான நாங்குநேரி தளபதி சமுத்திரம் ஊராட்சி, நல்லான்குளம் ஊரில் வசிக்கும் அவரது தாயார் பூங்கொடி அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் நாங்குநேரி மெயின்பஜார், மறுகால்குறிச்சி, கிருஷ்ணன்புதூர், பெரும்பத்து, மஞ்சன்குளம் மற்றும் நாங்குநேரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், நாங்குநேரி அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரிய பெருமாள், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் விஜயநாராயணம் அசோக்குமார், பருத்திப்பாடு கணபதி, பாசறை மாவட்டச் செயலாளர் ஜோசப், ஒன்றியச் செயலாளர்கள் பாளை தெற்கு முத்துக்குட்டி பாண்டியன், நாங்குநேரி தெற்கு விஜயகுமார், வடக்கு சங்கரலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி நாங்குநேரி ஒன்றியச் செயலாளர் ஜான்சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் மணிப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமானோர்
பங்கேற்றனர்.

The post நாங்குநேரி சுற்றுவட்டார 44 குளங்களுக்கு பச்சையாற்று தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nellai ,Nellai Lok Sabha Constituency ADMK ,Nanguneri railway ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...