×

தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 609 பேர் சுயேச்சைகள்

சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சிகளை தவிர்த்து 609 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக களத்தில் நிற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் பரிசீலனை, வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் அவர்களின் கட்சி சின்னங்களில் போட்டியிடுகிறார்கள். சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் அதிகளவில் சுயேச்சை வேட்பாளர்களே போட்டியிடுகிறார்கள். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள தகவல்: தமிழகத்தில் திமுக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 34 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜ 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதி, பாமக 10, நாம் தமிழர் கட்சி 39, பகுஜன் சமாஜ் பார்ட்டி 39, தேமுதிக 5, மார்க்சிய கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, தமாகா 3, அமமுக 2, நாடாளும் மக்கள் கட்சி 12 மற்றும் சுயேச்சைகள் 609 பேர் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 609 பேர் சுயேச்சைகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Election Commission ,DMK ,AIADMK ,Congress ,BJP ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...