×

தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி உயர்ந்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: 2021ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.

கூடுதல் தகவல் இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil ,Nadu ,M.K. Stalin David ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...