×

எங்க அதிகமாக காசு வரும்னு பார்த்து கூட்டணி வெச்சு இருக்காங்க..! பாமகவால் அதிமுக ஜெயித்ததா? மிகப்பெரிய பெரிய ஜோக்…: செல்லூர் ராஜூ பளார்…பளார்…

மதுரை கே.கே.நகரில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாக கூறுகிறீர்கள். எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கும். ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து பாமக, பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. கட்சி ஆரம்பிக்கும்போது குடும்பத்தினர் கட்சிக்குள் வந்தால், முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார். பாஜ கூட்டணியை ராமதாஸ் ஏற்கவில்லை. அன்புமணி ராமதாசின் வற்புறுத்தலில்தான் சேர்ந்துள்ளனர். வயதாகிப்போனால் மகன் சொல்வதைத்தானே கேட்கணும். பாமகவால் அதிமுக ஜெயித்தது என்றால் அது மிகப்பெரிய பெரிய ஜோக். அன்புமணி ராமதாஸ் பேச்சு ஒரு பேச்சே இல்லை.

கள நிலவரத்தில் பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாசின் துணைவியார் தொகுதியில் வேலை பார்க்கவே பூத் கமிட்டி இல்லையாம். பாமகவிற்கு ஒரு கிளையாவது தென்மாவட்டத்தில் இருக்கிறதா? அந்த கட்சி எங்களை நிமித்தியது என்றால் கேலிக்கூத்துதான். தோழமை என்று வரும்போது மரியாதை கொடுப்போம். பாஜவுடன் பாமக கூட்டணி வைத்திருக்கிறதே கொள்கை கூட்டணியா? நாங்கள் பாமகவை தியாகி எனச் சொன்னதில்லை. அவர்களுக்கு பேரே இருக்கு. மரம் வெட்டி என ஒரு காலத்தில் அவங்க அப்பாவை சொல்வார்கள். நாங்கள் இவர்களை தோளில்தான் தூக்குகிறோம்.

எங்களைத் தூக்கத்தான் ஆளில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் கட்சியினர் உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். ஜெயலலிதா இருக்கும்போது இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏதும் பேசியதில்லை. எடப்பாடி வந்தவுடன் இதுபோல் பேசுகிறார்களே எனக் கேட்கிறீர்கள். அதிமுகவில் ஜெயலலிதாவை திட்டாதவர் யாருங்க… நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் ஜெயலலிதாவை திட்டினார்கள். ஜெயலலிதாவும் உதிர்ந்த ரோமம் என திட்டினார். யாரும் கூட்டணியில் வரவில்லை என்றால் கவலைப்பட மாட்டார். தமிழகத்தில் இரு கட்சிகள் தான். ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக. இந்த தேர்தலிலும் திமுகவிற்கா? அதிமுகவிற்கா? என்றுதான் மக்கள் பார்ப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

The post எங்க அதிகமாக காசு வரும்னு பார்த்து கூட்டணி வெச்சு இருக்காங்க..! பாமகவால் அதிமுக ஜெயித்ததா? மிகப்பெரிய பெரிய ஜோக்…: செல்லூர் ராஜூ பளார்…பளார்… appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BAM ,Sellur Raju Palar… ,Former ,Minister ,Sellur Raju ,Madurai KK Nagar ,Anbumani Ramadoss ,Rajya Sabha ,Bamka ,BJP ,Sellur Raju Balar… ,Balar… ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...