×
Saravana Stores

பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம் முழங்க விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

விருதுநகர்: தென்மாவட்டங்களில் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. பங்குனிப்பொங்கல் திருவிழாவிற்கு கடந்த மார்ச் 17ம் தேதி சாட்டுதல் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆகோ, அய்யாகோ’ கோஷம் எழுப்பினர். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று காலை காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

சாட்டுதல் துவங்கிய நாள் முதல் ஏராளமான பெண்கள் தினமும் கொடிமரத்திற்கு நேர்த்திக்கடனாக தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஏப்.7ல் பொங்கல் வழிபாடு, ஏப்.8ல் அக்கினிச்சட்டி மற்றும் கயிறு குத்துதல், ஏப்.9ல் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.14ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம் முழங்க விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Bunguni Pongal festival ,Virudhunagar ,Mariyamman Temple Bhanguni Pongal Festival ,Chatuwa ,Pangunipongal festival ,Panguni Pongal festival ,Ago ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்...