×

மல்டி வெஜ் குழிப்பணியாரம்

தேவையானவை:

இட்லி மாவு – 2 கப்,
இட்லி மிளகாய் பொடியுடன் வதக்கிய வெங்காயம் – 4 டேபிள் ஸ்பூன்,
வதக்கிய கேரட், பீட்ரூட் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
மிளகுத் தூள்-சிறிது,
பச்சை, மஞ்சள் குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – 5 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிது.

செய்முறை:

இட்லி மாவுடன் வதக்கிய கேரட், மல்லித்தழை, பீட்ரூட் துருவல், வதக்கிய குடைமிளகாய், வதக்கிய இட்லி மிளகாய் பொடியுடன் வெங்காயம், மிளகு தூள், சிறிது உப்பு ேசர்த்து கலக்கவும். குழிப்பணியார தட்டில் எண்ணெய் ஊற்றி மல்டி வெஜ் குழிப்பணியாரங்களாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் மாலை நேர டிபனாக சாப்பிட ருசியாக இருக்கும்.

The post மல்டி வெஜ் குழிப்பணியாரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை