×

கேரட், முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,
முள்ளங்கி, கேரட் துருவல் – 1 கப்.

தாளிக்க

எண்ணெய்,
மிளகாய் தூள்,
தனியா தூள்,
சீரகத்தூள்,
மிளகுத்தூள்,
ஓமம் சேர்த்து 2 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – அரிந்தது 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் கேரட், முள்ளங்கி துருவல், உப்பு சேர்த்து சற்றே வதக்கவும். இதனை கோதுமை மாவில் சேர்த்து கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசையவும். கொத்தமல்லி தழை நறுக்கியதையும் சேர்த்து நன்றாக பிசைந்து 1 மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும். சைட் டிஷ் தயிர் பச்சடி தொட்டு சாப்பிடலாம். வைட்டமின், மினரல், நார்ச்சத்து நிறைந்தது.

The post கேரட், முள்ளங்கி சப்பாத்தி appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்