×

டெல்லி நொய்டாவில் Uber ஆட்டோவில் பயணம் செய்த பயணிக்கு ரூ.7.66 கோடி கட்டண தொகை


டெல்லி: டெல்லி நொய்டாவில் Uber மூலம் ஆட்டோவில் பயணம் செய்த தீபக் தெங்குரியாவிற்கு கட்டணமாக ரூ.7.66 கோடி என காட்டியதால் அதிர்ச்சி; Uber ஆட்டோவை புக் செய்யும் போது ரூ.62 ஆக இருந்த கட்டணம், பயண முடிவில் கோடிகளில் காட்டியதால் அதிர்ந்த பயணி

UBER, OLA வாகனங்களில் மழைக்காலம் மற்றும் காலை, மாலை நேரங்களில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஆனால், டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் ஆட்டோவில் பயணித்த வாடிக்கையாளருக்கு UBER நிறுவனம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது

தீபக் என்பவர் ஆட்டோவை புக் செய்யும்போது 62 ரூபாயாக கட்டணம் இருந்திருக்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்கியபோது 7 கோடியே 66 லட்சம் ரூபாய் என பில் வந்துள்ளது. அதை கண்டு அவர் மட்டுமல்ல ஆட்டோ ஓட்டுநரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்.

தீபக் தனது போன் திரையை கேமராவில் காட்டியபோது, ​​”பயணக் கட்டணமாக” 1,67,74,647 ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. கூடுதலாக, அவரது காத்திருப்பு நேரத்திற்கு ரூ. 5,99,09,189-யும் மேலும் விளம்பர தள்ளுபடி ரூ.75 சேர்த்து பில் அனுப்பப்பட்டது

62 ரூபாய் கட்டணத்திற்கு 7 கோடியே 66 லட்சம் ரூபாய் பில் வந்திருப்பது குறித்து வாடிக்கையாளர் தீபக்கின் நண்பர், UBER INDIA நிறுவனத்தை எக்ஸ் வலைதளத்தில் டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலான பிறகு, Uber India இன் வாடிக்கையாளர் ஆதரவு நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, இந்த விஷயத்தை விசாரிப்பதாக உறுதியளித்தது. இது போன்ற தவறு நடந்ததற்கு மன்னிக்கவும். உங்களுக்காக இந்த தவறை நாங்கள் சரி செய்து விடுகிறோம் சிறிது நேரம் கொடுங்கள். புதுப்பித்தலுடன் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

The post டெல்லி நொய்டாவில் Uber ஆட்டோவில் பயணம் செய்த பயணிக்கு ரூ.7.66 கோடி கட்டண தொகை appeared first on Dinakaran.

Tags : Uber ,Noida, Delhi ,Delhi ,Deepak Tenguria ,Delhi Noida ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...