×

பக்தர்களின் வசதிக்காக பழநி கிரிவீதியில் 2 மின்சார பஸ்கள் இயக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

இந்நிலையில், சுமார் 3 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவீதியில் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மற்றும் சுற்றுலா பஸ்நிலையங்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு பஸ், 5க்கும் மேற்பட்ட பேட்டரி கார்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பக்தர்கள் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில், பக்தர்கள் போக்குவரத்துக்கு வசதியாக தனியார் நிறுவனம் சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 2 மின்சார பஸ்களும், 1 டீசல் பஸ்சும் வழங்கப்பட்டது. நேற்று மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

The post பக்தர்களின் வசதிக்காக பழநி கிரிவீதியில் 2 மின்சார பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Palani Giriveedhi ,Palani ,Dindigul District ,Thandayuthapani Swamy Temple ,Sami ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை