×

2024-25ம் நிதி ஆண்டின் முதல் நாளிலேயே புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள்..!!

மும்பை: 2024-25-ம் நிதி ஆண்டின் முதல் நாளிலேயே புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், உயர்வுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து 74,254-புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்வுடன் 74,015 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடக்க நேர வர்த்தகத்தின் போது 203 புள்ளிகள் உயர்ந்து 22,259 ஐ தொட்டது.

வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 135 புள்ளிகள் உயர்வுடன் 22,462 புள்ளிகளில் நிறைவடைந்தது. JSW ஸ்டீல் பங்கு 4.8%, டாடா ஸ்டீல் பங்கு 4.6%, அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2%, என்.டி.பி.சி. பங்கு 1.9% விலை உயர்ந்தன. எல்&டி, எச்.டி.எஃப்.சி. வங்கி, பவர் கிரிட், விப்ரோ பங்குகள் 1%-க்கும் மேல் விலை உயர்ந்து விற்பனையாயின. எச்.சி.எல். டெக், ஏசியன் பெயின்ட்ஸ், டி.சி.எஸ்., இந்துஸ்தான் யுனிலீவர், எஸ்.பி.ஐ. பங்குகளும் விலை உயர்ந்தன. டைட்டன் பங்கு 1.7%, நெஸ்லே பங்கு 1.4%, பார்த்தி ஏர்டெல் பங்கு 0.8% விலை குறைந்து விற்பனையாயின.

The post 2024-25ம் நிதி ஆண்டின் முதல் நாளிலேயே புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள்..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BSE Sensex ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!