×

மக்களவை தேர்தலையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை!!

பெங்களூரு: கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற முதலமைச்சர் சித்தராமையாவின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி தொடங்கி வரும் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்களின் விநியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் சித்தராமையா கோலார் நோக்கி சென்று கொண்டிருந்தார். மாவட்ட எல்லையான ராமச்சந்திர கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினர் சித்தராமையாவின் கரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களுடன் வந்த மற்ற கார்களும் சோதனைக்கு பின்னரே கோலார் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

The post மக்களவை தேர்தலையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு