×

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். அதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலேசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், 4ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Sathyaprada Chagu ,Chennai ,Satyapratha Sahu ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...