×

அதிக வட்டி தருவதாக கூறி தம்பதியிடம் ₹30 லட்சம் மோசடி கம்பெனி உரிமையாளர் சிக்கினார்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (40). இவர் சென்னை மேற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
எனது கணவர் கணேஷ்குமாரின் நண்பர் ஹரிவெங்கடேஸ்வரன்(40) என்பவர் சாலிகிராமம் பகுதியில் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் மாதந்தோறும் 1.5% வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு தனியார் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் மின்ட்வெஸ்ட் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கர்நாடகா வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.

அதன் பின்னர் 3 மாதங்கள் வட்டி கொடுத்தனர். பணம் முதலீடு செய்வதற்கு ஆசைவார்த்தை கூறியதை அடுத்து மீண்டும் 2019ம் ஆண்டு 4வது மாதம் மேலும் 30 லட்சம் முதலீடு செய்தேன். இதன்பிறகு வட்டி தராமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இதனால் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் சென்று 30 லட்சத்தை கேட்டபோது திருப்பி தர முடியாது என்றும் உங்களால் என்ன செய்ய முடிமோ செய்து கொள்ளுங்கள் என எங்களை மிரட்டி வருகிறார். எனவே அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஹரி வெங்டேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், திருமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்வதற்கு இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தலைமறைவாகிவிட்ட ஹரி வெங்கடேஸ்வரனை போலீசார் தேடிவந்த நிலையில், சாலிகிராமம் பகுதிக்கு வந்த ஹரி வெங்கடேஸ்வரனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அதிக வட்டி தருவதாக கூறி தம்பதியிடம் ₹30 லட்சம் மோசடி கம்பெனி உரிமையாளர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Divya ,Tirumangalam ,Chennai ,Chennai West Joint Commissioner's Office ,Ganeshkumar ,Harivenkateswaran ,Saligramam ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்