×

நான் எம்பி ஆக இருந்த போது ₹1500 கோடி மதிப்பீட்டில் தென்சென்னை பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை

சென்னை: நான் எம்பி ஆக இருந்த போது ரூ.1500 கோடி மதிப்பீட்டில் தென்சென்னை பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டேன் என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை மேற்கொண்டார். தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் இன்று 7வது நாளாக ஆற்காடு சாலையில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் பேசியதாவது: தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி ஒன்றிய நகர்புற துறை அமைச்சர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்து நிதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக, தி.நகர், தென்சென்னை பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ஒன்றிய அரசாங்கத்திடம் நிதி பெற்று வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டேன்.

The post நான் எம்பி ஆக இருந்த போது ₹1500 கோடி மதிப்பீட்டில் தென்சென்னை பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : South Chennai ,AIADMK ,Jayavardhan Parrapurai ,Chennai ,South ,Jayavardhan ,South Chennai Constituency ,Dr. ,J. Jayawardhan ,Jayawardhan ,Dinakaran ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...