×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? – உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? என மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2022-ல் உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கைது செய்தபோது மனித உரிமை மீறப்பட்டதாக ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரை கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததற்கு எதிராக ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். காவல்துறை அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும் முடித்து வைக்க உரிய காரணம் கூறியிருக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? – உயர் நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : minister ,Jayakumar ,Chennai ,Madras High Court ,Human Rights Commission ,DMK ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...