×

அமெரிக்காவில் பாலத்தில் மோதிய சரக்கு கப்பல்: ஆறு நாட்களாக கப்பலில் சிக்கி தவிக்கும் 22 இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 22 இந்தியர்கள் 6 நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து 4,200 கன்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடந்த 26ம் தேதி அமெரிக்காவில் பால்டிமோர் மகாணத்தில் உள்ள பாலத்தில் மோதியது. இந்த பயங்க விபத்தில் முற்றிலுமாக உடைந்து ஆற்றில் விழுந்தது.

பாலத்தில் பணியாற்றி கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 985 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலின் மீது உடைந்த பாலத்தின் இரும்பு பாகங்கள் விழுந்தன. கப்பலை சுற்றி இரும்பு பாகங்கள் சூழந்து இருப்பதால் அவற்றை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கப்பலில் உள்ள 22 இந்தியர்கள், 6 நாட்களாக வெளி உலக தொடர்பின்றி தவித்து வருகின்றனர்.

The post அமெரிக்காவில் பாலத்தில் மோதிய சரக்கு கப்பல்: ஆறு நாட்களாக கப்பலில் சிக்கி தவிக்கும் 22 இந்தியர்கள் appeared first on Dinakaran.

Tags : Cargo ,US ,Washington ,America ,Sri Lanka ,Baltimore, USA ,Indians ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...