×
Saravana Stores

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்..!!

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்றைய தினம் அவரது இல்லத்தில் பாஜக பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருதை வழங்கினார்.

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக ராஷ்டிரபதி பவன் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. அத்தகைய பதிவில் உள்ள புகைப்படத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு பிரதமர் மோடி அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை நிற்க வைத்துவிட்டு தான் உட்கார்ந்து இருந்ததன் மூலம் அவரை பகிரங்கமாக மோடி அவமதித்து விட்டார். மோடி ஜாதி மற்றும் பாலின ரீதியில் காட்டும் பாகுபாட்டை அவரது நடவடிக்கை எடுத்துக்காட்டி விட்டதாக கனிமொழி விமர்சனம் செய்தார். பின்னர், அத்வானிக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.

The post ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,President ,Thraupathi Murmu ,Kanimozhi MLA ,Chennai ,Modi ,Thraupati Murmu ,BJP ,Deputy Prime Minister ,L. K. Advani ,Kanimozhi ,
× RELATED இருதரப்பு உறவை மேம்படுத்துவதில்...