×

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்களில் 30% மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி..!!

சென்னை: இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்களில் 30% மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மின்னணு சாதன பொருட்கள் ஏற்றுமதியில் 2022 வரை உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது தமிழ்நாட்டில் இருந்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் பின்தங்கியோ அல்லது அதே அளவிலோ உள்ளன. நாட்டில் ஏற்றுமதியாகும் பொருட்களில் மின்னணு பொருட்கள் பங்களிப்பு 2 மடங்கானது தமிழ்நாட்டால்தான்.

தமிழகத்தில் இருந்து நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை 61,171 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசின் தொழில்துறை தெரிவித்துள்ளது. தொலைநோக்கு பார்வை உடைய தலைமைத்துவம், உற்பத்தி மற்றும் துல்லிய பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற சிறப்பு அம்சங்களால் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2022 – 23 நிதியாண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 44,571 கோடி ரூபாய் என்பது நினைவுகூரத்தக்கது.

The post இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்களில் 30% மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி..!! appeared first on Dinakaran.

Tags : India ,Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,Uttar Pradesh ,Karnataka ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...