×

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது; 1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உள்ளது. 1974-ல் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன என கூறினார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை; இந்திரா காந்தி ஒரு அடி எடுத்து வைக்கும் போதும் தேச நலனுக்காகவே எடுத்து வைத்தார். தேர்தலுக்காக பதவிப் பிரமாணத்தை மீறும் வகையில் அரசின் கொள்கை முடிவுகளை வெளியிடுகிறார் ஜெய்சங்கர். அரசின் ரகசியங்களை வெளிப்படையாக கூறியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துள்ளார் ஜெய்சங்கர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : President ,External Affairs Minister ,Jaishankar ,Selvaperundagai ,Chennai ,Selvaperunthagai ,Lok Sabha elections ,Kachchathivu ,Selvapperundagai ,
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...