×

இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ஊராட்சியில் அனைத்து  குடியிருப்புகளிலும் இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் டெய்சிராணி அன்பு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வேதவல்லி சதீஷ்குமார், துணைத் தலைவர் சசிகலா கோபிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆமோஸ், ஜான்சன் ஆகியோர் வரவேற்றனர். கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலர் சரவணன் தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் கலந்து கொண்டார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள்  விஜயகாந்த், ஒஸ்லின் கிருபா, மேற்பார்வையாளர் தா.மீகாவேல், ஆசிரியர் அலெக்ஸ், ஆதிதிராவிடர் விடுதி குழு உறுப்பினர் ரவி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் காண்டீபன், ஆனந்தன், ஆரோக்கியமேரி , ஜெயலட்சுமி, ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chevvapet Panchayat ,Panchayat ,President ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி