×

அதானி நிறுவனம் பராமரிக்கும் கவுகாத்தி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தி நகரில் லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மோடி அரசின் தனியார் மய திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் விமான நிலையத்தை இயக்கி, பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்று மாலை கனமழை பெய்தது. அப்போது, விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து பல இடங்களில் தண்ணீர் அருவி போல் கொட்டியது. திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேற்கூரை இடிந்து விழுவதும், கூரையில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. சரியான பராமரிப்பு இல்லாததால்தான் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் பயணிகள் பலர் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.

 

The post அதானி நிறுவனம் பராமரிக்கும் கவுகாத்தி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Gawuwati Airport ,Adani ,Lokbria Gopinath Bardolai International Airport ,Gawahati, Assam ,ADANI GROUP ,MODI ,MAYA ,Gawukathi airport ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...