×

இலங்கை அணி 531 ஆல் அவுட்

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று அந்த அணி 531 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (159 ஓவர்).

முதல் நாளில் மதுஷ்கா 57, கருணரத்னே 86, குசால் மெண்டிஸ் 93, ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன் விளாசி பெவிலியன் திரும்பிய நிலையில், நேற்று சண்டிமால் 59, கேப்டன் தனஞ்ஜெயா 70, பிரபாத் 28 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 92 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது. ஹசன் ஜாய் 21 ரன்னில் அவுட்டானார். ஜாகிர் ஹசன் 28, தைஜுல் (0) களத்தில் உள்ளனர்.

The post இலங்கை அணி 531 ஆல் அவுட் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Bangladesh ,Ahmed Chaudhary Stadium ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...