×

நடிகர் சுரேஷ் கோபி மீது தேர்தல் விதிமீறல் புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக மலையாள நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ்கோபி போட்டியிடுகிறார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தரும் நோட்டீஸ்களில் பிரிண்டிங் செய்த நிறுவனத்தின் பெயர் மற்றும் விவரங்கள் இருக்க வேண்டும்.

ஆனால் சுரேஷ்கோபி சார்பில் விநியோகிக்கப்பட்டு வரும் நோட்டீஸ்களில் பிரிண்டிங் குறித்த எந்த விவரங்களும் இல்லை. இதுதொடர்பாக தேர்தல் விதிகளை மீறியதாக கூறி சுரேஷ்கோபி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி விளக்கம் தர திருச்சூர் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

The post நடிகர் சுரேஷ் கோபி மீது தேர்தல் விதிமீறல் புகார் appeared first on Dinakaran.

Tags : Suresh Gopi ,Thiruvananthapuram ,Rajya Sabha ,BJP ,Thrissur ,Kerala ,Election Commission ,Dinakaran ,
× RELATED இணையமைச்சர் பதவி வழங்கியதால் அதிருப்தி சுரேஷ்கோபி பதவி விலகத் திட்டம்?