×

ராத்திரி ஒரு கூட்டணி…காலையில் ஒரு கூட்டணி…அதிமுக, பாஜ, பாமகவை பங்கம் செய்த சீமான்

சிவகங்கை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரைக்குடியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘‘இது அரசியல் மாற்றத்துக்கான தேர்தல் களம். இந்த தேர்தல் அநீதி, ஊழல், லஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிரான போர். இதுவரை அனுபவிக்கும் துன்பங்களை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ராத்திரி வரை ஒரு கூட்டணியில் உள்ளார்கள். காலையில் வேறு கூட்டணியில் உள்ளார்கள். இந்த வண்டியை யார் வைத்து இருக்கிறார்கள் என்பது போல, சொப்பன சுந்தரியை யார் வைத்து இருக்கிறார்கள்? ராத்திரி ஒருத்தர் வைத்து இருந்தார். காலையில் ஒருத்தர் வைத்து இருக்கிறார். மாலை யார் வைத்து இருப்பாரே தெரியவில்லை.

நான் பள்ளியில் படிக்கும் போது கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தேன். கல்லூரியில் படிக்கும் போது உதயசூரியன் சின்னம் வரைந்து வாக்கு சேகரித்தேன். எடப்பாடி பதவி மிதப்பில், பதவி திமிரில் கூட்டணிக்கு வந்தவர்களை விட்டு விட்டார். ஆனால் யாரை ஒதுக்கினாரோ அவர்களை சேர்த்துள்ளார்’’ என்றார். பின்னர், மக்கள் ஆழ்ந்து தெளிந்து வாக்களிக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கும் போதே, ‘‘ஓட்டுப் போடும் பெண்ணே ஒதுங்கி நிற்காதே. கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிற்காதே’’ என பாட்டுப்பாட துவங்கினார்.

* ‘நாட்டை வெட்டி தின்றால் பாரதிய ஜனதா பார்ட்டி’
சீமான் பேசுகையில், ‘கேக் வெட்டி சாப்பிட்டால் அது பெர்த்டே பார்ட்டி, கோழியை வெட்டி சாப்பிட்டால் சிக்கன் பார்ட்டி, ஆட்டை வெட்டி தின்றால் மட்டன் பார்ட்டி, நாட்டை வெட்டி தின்றால் அது பாரதிய ஜனதா பார்ட்டி. இவர்களுக்கு கொள்கை கிடையாது. ஜெய் ஸ்ரீராம், பாரத மாதாவுக்கு ஜெ. இதுதவிர வேறு எதுவும் தெரியாது.

ஒரே மந்திரத்தை தொடர்ந்து சொல்வார்கள். ராமருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம். ராமரை கட்சியின் பிராபர்ட்டி போல் ஆக்கி விட்டார்கள். மக்கள் செத்து விழுந்தாலும் அவர்களுக்கு கவலை கிடையாது. பசியால் கத்தினாலும் கவலை இல்லை. பாஜக மனித குலத்தின் எதிரி’ என்றார்.

The post ராத்திரி ஒரு கூட்டணி…காலையில் ஒரு கூட்டணி…அதிமுக, பாஜ, பாமகவை பங்கம் செய்த சீமான் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,BAM ,Ezhilarasi ,Sivagangai Lok Sabha ,Naam Tamilar Party ,Chief Coordinator ,Karaikudi ,Seeman ,ADMK ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...