×

பாஜ டெபாசிட் இழக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவு: கே.பாலகிருஷ்ணன் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் தேர்தலில் பாஜ கடந்த முறை பெற்ற இடங்களை விட சரிபாதிக்கும் குறைவான இடங்களை பெறும் என்ற கருத்து கணிப்பு தான் வந்து கொண்டிருக்கிறது. 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது. மோடி ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரப்போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவோடு இருக்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி பதட்டமடைந்து எதிர்கட்சி தலைவர்கள் மீது பல்வேறு வித தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்குவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை முடக்கலாம் என நினைக்கிறார். டெல்லி முதல்வரை கைது செய்ததன் மூலம் அவரது எதிர்பிரசாரத்தை முறியடித்து விடலாம் என்றும் நினைக்கிறார். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக டெப்பாசிட் இழக்கும். தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு எதிர் அணியாக அதிமுக உள்ளது. பாஜக களத்திலேயே இல்லை. தமிழகத்தில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ டெபாசிட் இழக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவு: கே.பாலகிருஷ்ணன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,K. Balakrishnan ,State Secretary ,K. ,Communist Party ,Communist Party of India ,Kulitura, Kanyakumari district ,Balakrishnan ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?