×

சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் விற்பனை: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க பீகார் மாநிலம் விரைந்தது தனிப்படை

சென்னை: சென்னையில் பிரபல ரவுடிகளுக்கு நாட்டு துப்பாக்கி மற்றும் கைப் துப்பாக்கிகளை சப்ளை செய்த வழக்கில் போலீஸ் காவலில் 10 நாள் விசாரணை முடிந்து 7 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மூன்று பிரபல ரவுடிகளுடன் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார் மாநிலம் விரைந்துள்ளனர்.

சென்னை திருமங்கலத்தில் ஒரு தனியார் ஓட்டலில் கடந்த மாதம் 13ம் தேதி சதிதிட்டம் தீட்டிய பிரபல ரவுடிகள் ஜெயபால்(63) சொக்கலிங்கம்(எ)சுரேஷ்(24), பிரசன்னா(31), வசந்த் டேவிட்(29), செல்வபாரதி(26), ராஜபிரகாஷ் காட்டின், ராஜ்குமார், தம்பிராஜ்(57), சரண்(எ) சரண்குமார்(28), ஜோதி(35), வினோத் குமார்(33), மகேந்திரன், சுந்தர்ராஜ்(38), முனுசாமி(49), சர்வேன்(48), துரைராஜ்(28), ஜீவானந்தம்(34), முகமதுஅலி(59), சுந்தரமூர்த்தி(41), அசோக்பாபு(51), ராஜேஷ்(எ)ராஜி(26) உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கி முனையில போலீசார் கைது செய்தனர்.

சதிதிட்டம் தீட்டியதாக வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரை தனிப்படை போலீசார் கடந்த 17ம் தேதி கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தம்பிராஜ் மூலம் சென்னையில் உள்ள ரவுடிகளுக்கு நாட்டு துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கிகளை சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான தம்பிராஜ், ஜெயபால் சொக்கலிங்கம், முத்துகுமார், இஸ்மாயில், உள்ளிட்ட 10 ரவுடிகளை கடந்த 21ம் தேதி நீதிமன்றக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதில், துப்பாக்கிகள் விற்பனையில் தொடர்புடைய மேலும் சிலர் பீகாரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 10 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், கைதிகள் 7 பேரை மட்டும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தம்பிராஜ், இஸ்மாயில் உள்ளிட்ட 3 பேரை பீகார் மாநிலம் அழைத்துச் சென்று துப்பாக்கிகள் விற்பனையில் தொடர்புடைய மேலும் சில முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் விற்பனை: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க பீகார் மாநிலம் விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bihar ,
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...