- பாஜக
- மூத்த தலைவர்
- அத்வானி
- குடியரசுத் தலைவர்
- தில்லி
- ஜனாதிபதி
- திரேலபதி மர்மு
- முன்னாள்
- பி. வி. நரசிம்மா ராவ்
- சவுத்ரி சரன் சிங்
- எம் எஸ் சுவாமிநாதன்
- பீகார்
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இரண்டு முறை பீகார் முன்னாள் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் உள்ளிட்ட நால்வருக்கும் குடியரசுத் தலைவர் முர்மு நேற்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
முன்னாள் துணைப் பிரதமரும் பாஜக தலைவருமான எல்.கே.அத்வானிக்கு அவரது இல்லத்தில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கினார். மூத்த தலைவர் அத்வானியின் உடல்நிலை சரியில்லாததைக் கருத்தில் கொண்டு அவரது இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து குடியரசு தலைவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, உரையாடல் மீதான அவரது நம்பிக்கை பாராளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனைக் காட்டினார். இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கான அவரது நீண்ட மற்றும் அயராத போராட்டம் 2024இல் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் புனரமைப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது.”
சுதந்திரத்திற்குப் பிறகு, தேசிய முன்னுரிமைகளை மறுவடிவமைப்பதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதிலும் வெற்றி பெற்ற சில அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். அவரது சாதனைகள் இந்தியாவின் உள்ளார்ந்த திறமை மற்றும் உள்ளடக்கிய பாரம்பரியங்களின் சிறந்த வெளிப்பாட்டை வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முர்மு நேற்று மற்ற நான்கு பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் இரண்டு முறை பீகார் முன்னாள் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் உள்ளிட்ட நான்கு பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
The post பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர்! appeared first on Dinakaran.