×

இரவிகுளம் தேசிய பூங்கா நாளை திறப்பு: 108 வரையாடு குட்டிகள் புதுவரவு

மூணாறு: மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன. தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் இனப்பெருக்க காலம் என்பதால் தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவின் பேரில் பூங்கா பிப்.1 முதல் மார்ச் 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பூங்காவின் வனப்பகுதியில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். ஆனைமுடி, பெட்டி முடி, ராஜமலை, வரயாடுமேடு, மேஸ்திரிமேடு ஆகிய இடங்களில் வரையாடு குட்டிகள் காணப்படுகின்றன. கடந்த வருடத்தை விடவும் இம்முறை கூடுதல் குட்டிகள் பிறந்துள்ளதாகவும், இதன் துல்லிய கணக்கெடுப்பு ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வனவிலங்கு காப்பாளர் எஸ்.வி.வினோத் கூறுகையில், “தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது. ராஜமலைக்கு செல்லவும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்.1) பூங்கா திறக்கப்படும்’’ என்றார்.

இரண்டு மாத இடைவேளைக்குப் பிறகு சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படும் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக ராஜமலையில் புதிய சிற்றுண்டிச்சாலை மற்றும் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் மைலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பன்னல் செடி சேகரிப்பு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

The post இரவிகுளம் தேசிய பூங்கா நாளை திறப்பு: 108 வரையாடு குட்டிகள் புதுவரவு appeared first on Dinakaran.

Tags : Navikulam National Park ,Sunaru ,Narikulam National Park ,Munar ,MOONAR ,TENNAGATU KASHMIR ,RAVIKULAM NATIONAL PARK ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே ஓட்டலில் உணவு தேடிய...