×

தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு மற்றும் கரடிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருவது வாடிக்கைாயக உள்ளது.
அப்போது மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளால் அடிக்கடி பொதுமக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் காட்டு மாடுகள் தாக்குவதும், புலி மற்றும் சிறுத்தை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் இவைகள் தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்குள் சகஜமாக வருவதால் பொதுமக்கள் அட்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகியது. ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதியில் இருந்து அத்திகள் பகுதிக்கு செல்லும் சாலையில் ஓரத்தில் ஒரு புலி படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ வெளியானது. சுற்றுலா பயணிகள் சிலர் இந்த வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும், வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை ஓரத்தில் புலி ஒன்று படுத்து கொண்டிருப்பது போல் வெளியாகியுள்ள வீடியோவால் தற்போது இப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் இது பொது மக்களையோ அல்லது கால்நடைகளை தாக்காமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Thalakunda ,NEILGIRI DISTRICT ,
× RELATED ‘யூகலிப்டஸ்’ மரங்கள் வெட்டப்படுவதால்...