×

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” என விஜய் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையாக இன்று மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் ஆராதனைகள், திருப்பலிகள் நடைபெற்றது.

சாம்பல் புதனில் துவங்கிய தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் விரதம் இருந்து வந்தனர். புனித வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறுவாக கிறிஸ்துவர்கள் மகிழ்ந்து சிறப்பித்தனர். உலகெங்கும் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

The post ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Easter ,Vijay ,president ,Tamil Nadu Victory Club ,Chennai ,Easter Day ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்