×

வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்ய உத்தரவு ஜவ்வாதுமலையில்

போளூர், மார்ச் 31: ஜவ்வாதுமலையில் வாக்குச்சாவடி ைமயங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்ய உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பணிபுரியிடம் 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் பட்டறைக்காடு கிராமத்தில் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்களிடம் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் சாமை, தேன், புளி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சீர் வரிசினை கிராம மக்களுக்கு வழங்கி வாக்காளர் கையேட்டினை, வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில் உதவி தேர்தல் அலுவலர் க.சாந்தி, தாசில்தார் ப.மனோகரன் அரசு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்ய உத்தரவு ஜவ்வாதுமலையில் appeared first on Dinakaran.

Tags : Javwadumalai ,Collector ,Bhaskara Bond ,Javvadumalai ,Tiruvannamalai District ,Javvadumalai Tribal Farmers Producers Corporation ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...