×
Saravana Stores

திருச்செந்தூரில் ஆர்டிஓ சுகுமாறன் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்கமுகாம்

திருச்செந்தூர், மார்ச் 31: திருச்செந்தூரில் மின்னணு வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்க முகாம் ஆர்டிஓ சுகுமாறன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மண்டல அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான லட்சுமிபதி உத்தரவின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன் தலைமையில் மண்டல அலுவலர்களுக்து தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்க முகாம் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ சுகுமாறன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மண்டல அலுவலர்கள், துணை அலுவலர்கள் என திரளானோர் பங்கேற்றனர். ஆர்டிஓ சுகுமாறன், முக்கிய ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யூனியன் பிடிஓக்ககள், துணை அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post திருச்செந்தூரில் ஆர்டிஓ சுகுமாறன் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்கமுகாம் appeared first on Dinakaran.

Tags : Electronic Voting Action Camp ,RTO Sukumaran ,Tricendur ,TRICHENDUR ,TRUSCHENDUR ,Tamil Nadu ,Electronic Voting ,Action Camp ,Tiruchendur ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் கட்டப்பட்டுள்ள...