×
Saravana Stores

தேர்தல் விதிகளை மீறி வாக்குவாதம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

நெல்லை, மார்ச் 31: நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மற்றும் அவருடன் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் வேட்பாளருடன் வந்த திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, பாளை. தாசில்தார் சரவணன் அளித்த புகாரின் பேரில் பாளை. போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேர்தல் விதிகளை மீறி வாக்குவாதம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Naam Tamil Party ,Nellai ,Vanda Nam Tamil Party ,Sathya ,Lok Sabha ,
× RELATED தவெக – நாதக கூட்டணியா? இப்போதுதான்...