×

100% வாக்குப்பதிவு குறித்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு

பரமக்குடி, மார்ச் 31: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தல் ஆணையமும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

பரமக்குடியில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பரமக்குடி மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் ரங்கோலி கோலம் வரைந்து வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் ரங்கோலி கோலங்களை பார்வையிட்டார். இதில் சிறப்பாக கோலம் வரைந்திருந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பரமக்குடி தாசில்தார் சாந்தி மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

The post 100% வாக்குப்பதிவு குறித்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Lok Sabha ,India ,Tamil Nadu ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...