×

மண்டல பூஜை விழா

அலங்காநல்லூர், மார்ச் 31: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சின்னையன், பெரியய்யன் கோயில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 48 வது நாள் மண்டல பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேள்வி யாகம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புண்ணிய திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சின்னையன், பெரியய்யன் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்டல பூஜை விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மண்டல பூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Mandal Pooja Festival ,Alankanallur ,Mandal Pooja ,Kumbabhishek ,Chinnaiyan ,Kondayambatti village ,Alankanallur, Madurai district ,Shivacharyas ,
× RELATED மக்களை காக்க வேண்டிய போலீஸ் மீது...