×

திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

மதுராந்தகம், மார்ச் 31: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, நேற்று காலை மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். கூட்டத்தில், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி முருகேஷ், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, ராமச்சந்திரன், குமார், ஞானசேகர், சத்திய சாய், சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, பாபு, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் தசரதன், நந்தினி கரிகாலன், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜாராம கிருஷ்ணன், மாலதி, வசந்தா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், அயலக அணி துணை அமைப்பாளர் சிவலிங்கம், சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் நூருல் அமித், மாணவரணி துணை அமைப்பாளர் சரளா தனசேகரன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொன்னி வளவன், ராஜா, மாசிலாமணி, கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,DMK ,Selva ,Madhurantagam ,Youth secretary ,Udhayanidhi Stalin ,Kanchipuram ,Anna Bus Stand ,Madurantagam ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை