×

100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

நாமக்கல், மார்ச் 31:நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகராட்சி வாரச்சந்தையில், நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், சரக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், வாகனங்களில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், ரெட்கிராஸ் மாவட்ட செயலர் ராஜேஸ்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...