×

கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 31: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை ஆய்வாளர் கிருஷ்ணப்பா(40) மற்றும் அதிகாரிகள், பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி, அச்சமங்கலம், சத்தளப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த லாரியை சோதனையிட்டனர். அதில், 3 யூனிட் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post கருங்கல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Krishnagiri ,Krishnagiri Department of Mineral Resources ,Inspector ,Krishnappa ,BRG ,Parkur ,Mathepally ,Achamangalam ,Chattalapally ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13 பவுன் நகை மோசடி கருங்கல் அருகே பரபரப்பு