×

மூதாட்டியிடம் ஸ்கைப் கால் மூலம் சிபிஐ என மிரட்டி ரூ.10.50 லட்சம் பறிப்பு

ேகாவை, மார்ச் 31: கோவை காட்டூர் காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி (69). இவரது செல்போனில் சில நாட்களுக்கு முன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் சிபிஐ அதிகாரி எனக்கூறியுள்ளார். உங்கள் ஆதார் எண் வைத்து பல்வேறு மோசடியான கணக்கு கையாளப்பட்டிருக்கிறது. பலருக்கு உங்கள் ஆதார் கார்டு ஆதாரத்தின் மூலமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தொலை தொடர்பு துறை மூலமாக உங்களின் செல்போன் எண் கண்காணிக்கப்படுகிறது. நாங்கள் ஸ்கைப் செயலி மூலமாக உங்களிடம் பேசவேண்டும் எனக்கூறி ஸ்கைப் வீடியோ காலில் அழைத்து ஆங்கிலத்தில் பேசியுள்ளனர்.

அப்போது, அவர்கள் சிபிஐ சீருடை அணிந்திருப்பதை காட்டியுள்ளனர். நீங்கள் அந்நிய செலாவணி மோசடி நடக்கவில்லை என காட்ட வேண்டும் என்றால் 10.50 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும். நாங்கள் விசாரணை நடத்தி மோசடியில் உங்களின் தொடர்பு இல்லை என உறுதி செய்தால் உடனடியாக ஒரு மணி நேரத்தில் பணத்தை திரும்ப அனுப்பி விடுவோம் எனக்கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெயந்தி தனது கணவருக்கு தெரியாமல் 10.50 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன்பின், இவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை. இவரை தொடர்பு கொண்ட நபர் பயன்படுத்திய செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சிபிஐ அதிகாரி என மோசடியாக அந்த குழுவினர் ஏமாற்றியிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கோவை நகரில் இதுபோல் போலீஸ், மும்பை சைபர் அதிகாரிகள் என பலரிடம் பணம் பறித்துள்ளனர். தற்போது அந்த கும்பல் சிபிஐ எனக்கூறி கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மூதாட்டியிடம் ஸ்கைப் கால் மூலம் சிபிஐ என மிரட்டி ரூ.10.50 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : CBI ,Skype ,Kegawai ,Venkatesan ,Kalingarayan Road, Coimbatore ,Jayanthi ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...