×

கர்நாடக துணை முதல்வருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

பெங்களூரு: மக்களவை தேர்தல் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய டி.கே.சிவகுமார், ‘காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியை கண்டு பயப்படும் பாஜ, எதிர்க்கட்சிகளை குறிவைத்துள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் எனக்கும் ஐடி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு ஏற்கனவே முடிக்கப்பட்ட விஷயம். இதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் ’ என்றார்.

The post கர்நாடக துணை முதல்வருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,Bengaluru ,Income Tax Department ,TK Sivakumar ,Lok Sabha ,Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Delhi ,Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....