×

மண்டியாவில் போட்டியா? ஏப்.3ல் சுமலதா முடிவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மண்டியா தொகுதியில் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவிற்கு பாஜ ஆதரவளித்தது. பாஜவிடம் இம்முறையும் சுமலதா ஆதரவு கேட்டார். ஆனால் பா.ஜ கூட்டணியில் உள்ள குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மண்டியா தொகுதியை கேட்டதால், சுமலதாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மண்டியாவில் குமாரசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து மண்டியாவில் கண்டிப்பாக சுயேட்சையாக தனித்து போட்டியிடுவேன் என்று சுமலதா ஏற்கனவே கூறியிருந்தார். இதுதொடர்பாக எடியூரப்பா மற்றும் பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா ஆகிய இருவரும் சுமலதாவிடம் பேசினர். ஆனால் ஆதரவாளர்களுடன் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறிய சுமலதா நேற்று பெங்களூருவில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய சுமலதா, ‘மண்டியா தொகுதியில் போட்டியிடுவது குறித்த என் முடிவை ஏப்ரல் 3ம் தேதி தெரிவிப்பேன். பாஜவைப் போலவே காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அழைப்பு வந்தது. அம்பரீஷின் ஆதரவாளர்களை தவிர வேறு எந்த பெரிய பின்னணியும் எங்களுக்கு இல்லை’ என்று சுமலதா தெரிவித்தார்.

The post மண்டியாவில் போட்டியா? ஏப்.3ல் சுமலதா முடிவு appeared first on Dinakaran.

Tags : Mandya ,Sumalatha ,Bengaluru ,BJP ,2019 elections ,Karnataka ,Kumaraswamy ,Janata Dal ,Mandiya ,Dinakaran ,
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை